Tuesday, March 3, 2009

என் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம்
இலங்கை கிரிகெட் வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியது கண்டிக்க தக்க விடயம் தான்! கிரிக்கெட் வீரர்கள் விளையாட போன இடத்தில் உயிருக்கு ஆபத்து என்ற உடன் இங்கு பலர் தங்கள் ஆதங்கத்தையும் அனுதாபத்தையும் கொட்டி உள்ளனர், உலகமே திரும்பி பார்த்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது, போகல்ல விரைகிறார்...

ஆனால், அதே இலங்கையில் என் இனம், தினம் தினம் செத்து மடிகிறதே, பிஞ்சுக்குழந்தைகள், தம் கை கால் களை இழக்கிறதே, உண்ண உணவின்றி, பட்ட காயத்துக்கு மருந்து இன்றி ஒரு நாளைக்கு பல பத்துபேர் அநியாயமாக உயிரை விடுகின்றனரே?? இது இந்த சமூகத்தை கவலை கொள்ள வைத்ததாக தெரியவில்லையே?? இன்று கூச்சளிடுகிற உலகம், அப்பாவிகள் கொள்ளப்படுகிற போது தன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறதே??


என் அன்பான உலகமே உன்னை ஒன்று கேட்கிறேன், இப்போது தெரிகிறதா தீவிரவாதி எங்கு இருக்கிறான் என்று??!
கிரிகெட் காரன் உயிர் என்றால் சந்தணத்திலும் ஒரு சாமானிய தமிழன் உயிர் என்றான் சாக்கடையிலுமா செய்யப்பட்டிருக்கிறது??
ஒரு தீவிர வாதி சுட்டால் எப்படி வலிகிறதோ அப்படித் தானே ஒரு அரசாங்கள் சுடும் போதும் வலிக்கும்??
இன்று ஏதோ ராக்கட் தாக்குதல் நடத்தி, பிழைத்துக் கொண்டார்களாமே, தீவிரவாதியின் ராக்கட் குண்டு தான் கொள்ளுமோ? அரசாங்க விமானம் போடும் குண்டு, மயில் இரகினால் தடவிக் கொடுக்குமோ??

மூன்று பேருக்கு காயம் என்ற உடன் உலக ஊடகங்கள் வாரி கட்டிகொண்டு வந்து அங்கு கீறல் இங்கு வீரல் என்று செய்திக்காக நாக்கை தொங்கப் போட்டுகொண்டு அலைகிறதே, இலங்கை அரசின் இந்தப் போரின் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்கள் கொள்ளப் பட்டது குறித்து எவனும் எந்த உண்மையையும் சொல்ல வில்லையே (அடக்கு முறைகளையும் மீறி உண்மை உரைக்கும் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை நான் மதிக்கிறேன்) ??!
ஒரு கிரிகெட் வீரன் தாக்கப் படும் போது நீ உணரும் வலியும் வேதனையும் ஒரு பிஞ்சுக் குழந்தை கொல்லப் படும்போது காட்டாதது ஏன்??


வாழ்க உங்கள் மனிதாபிமானம்...

   

10 comments:

மதிபாலா said...

நியாயமான ஆதங்கம். இன்னொன்றும் முக்கியமே , இப்படி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளையும் , இன்றுவரை இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கும் புலிகளையும் ஒப்பிட்டு பயங்கரவாதம் , பயங்கரவாதம் என்று கூக்குரலிடும் சிங்கள பேரினவாதத்தின் குரலை நசுக்கும் வண்ணம் நமது பரப்புரைகள் உலக நாடுகளை அடைதல் வேண்டும்.

தமிழர் நேசன் said...

கருத்துகளுக்கு மிக்க நன்றி மதிபாலா அவர்களே. உங்கள் ஆலோசையை முழுமையாக ஏற்கிறேன்!
வருகைக்கு நன்றி..

நையாண்டி நைனா said...

நானும்,
தீவிரவாத தாக்குதலுக்கு எனது கண்டனங்களையும்.
ஆனால் அதே சமயத்தில், போர் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் பத்திரிக்கைகளுக்கும் எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

உயிர் வலி அனைவருக்கும் ஒன்று தான். இதை அருமையாக எடுத்து கூறியது உங்கள் பதிவு.

Sriragavan said...

YES you are 100% right mathibala.
Please please create many websites and write everthing in english....

do you know how many sites Sinhala busted has opend to publish their news..

please help eelam tamils

Joe said...

It's a good article and I agree with you.

Try to avoid the spelling mistakes...

தமிழர் நேசன் said...

//உயிர் வலி அனைவருக்கும் ஒன்று தான். இதை அருமையாக எடுத்து கூறியது உங்கள் பதிவு.//

வருகைக்கு நன்றி..

தமிழர் நேசன் said...

வருகைக்கு நன்றி ஜோ

Honest Raj said...

மதிபாலா, உங்கள் கருத்துக்கு சரியானதே! நாம் நமது வேலையை சரியாக செய்யவில்லை!
யூடுப் போன்ற பெரிய தளங்களில் சிங்களவர்கள், நம்மைபற்றி (தமிழ் மக்கள்) தவறான கருத்துக்களை பரப்புகிரர்கள்! மேலும் பல பெயர்களில் ஒரே கருத்தை பேஸ்ட் செய்கிறார்கள்!

வெத்து வேட்டு said...

to stop tamil killings tell Praba to surrender...
why can't Praba blast a bomb in Colombo and show that ltte is still capable of killing civilians in Colombo..so SL may listen... :)

தமிழர் நேசன் said...

I'm asking the same question to you! 'Vethu veetu'.
But my answer is LTTE never target civilians. They always target on military bases...
If Prabagaran surrendered, then no one is left behind to save the tamil people, But people like you who make comedy on dead bodies...

Post a Comment