Thursday, March 5, 2009

ஜெயலலிதாவின் திடீர் பல்ட்டி.

வடிவேல், 'வின்னர்' என்ற திரைப்படத்தில், அருமையாக ஒரு நகைச்சுவை செய்திருப்பார். அதில், "இதுவரை என்னை யாருமே தொட்டதில்லை என்பார்" கட்டத்துறை கேட்பார் "ஏன்டா போன மாசம் தானே உன்ன அடிச்சேன்?!" அதற்க்கு கைப்புளை வடிவேலு, "அது போன மாசம் இது இந்த மாசம்..." என்பார்.

நமது நடிகை அம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும் போது முதலில் என் நினைவுக்கு வந்தது இந்த காமெடி தான்..

அம்மா காமெடி பாக்கறதுக்கு முன்னாடி, மறுபடியும் ஒரு முறை நம்ம வின்னர் காமெடி பார்க்க நெனச்சா கீழ உள்ள படத்த சொடுக்குங்க..



என்ன செய்தின்னு கேளுங்களேன்..
"இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம், உண்டியல் மூலம் நிதி திரட்ட வேண்டுகோள்!!!!"

போன மாசம்...

ஒரு மாதத்திற்கு முன் ஜெ வின் நிலைப்பாடு,
ஈழ தமிழர் என்று சொல்ல மாட்டார், ஏனென்றால் ஈழம் என்ற ஒரு நாடே இல்லையாம்!
இராணுவம் நடத்தும் தாக்குதலில் அப்பாவிகள் உயிர் இழப்பது அவருக்கு சாதாரணம்!
இலங்கை தமிழர் பிரட்ச்சனையில் மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு மிகவும் சரியாம். இவர் அதை முழுமையாக ஆதரிக்கிறாராம்!
இவையெல்லாம் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் வாயால் சொல்லி செய்தியாக வந்தவை..

இந்த மாசம்..
ஆனால் இன்று, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ..
"இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன்பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கின்றன.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வருகின்ற 10.3.2009 செவ்வாய் கிழமை அன்று அதிமுக சென்னை மாநகரிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

என்ன நல்ல சிரிச்சீங்களா?? ஆமாங்க பெரியம்மா போட்ட மாஸ்டர் ப்ளான் இந்த காமெடி மாதரி ஆக போகுது!!!

   

No comments:

Post a Comment