Showing posts with label ஸ்ரீலங்கா. Show all posts
Showing posts with label ஸ்ரீலங்கா. Show all posts

Tuesday, March 3, 2009

என் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம்




இலங்கை கிரிகெட் வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியது கண்டிக்க தக்க விடயம் தான்! கிரிக்கெட் வீரர்கள் விளையாட போன இடத்தில் உயிருக்கு ஆபத்து என்ற உடன் இங்கு பலர் தங்கள் ஆதங்கத்தையும் அனுதாபத்தையும் கொட்டி உள்ளனர், உலகமே திரும்பி பார்த்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது, போகல்ல விரைகிறார்...

ஆனால், அதே இலங்கையில் என் இனம், தினம் தினம் செத்து மடிகிறதே, பிஞ்சுக்குழந்தைகள், தம் கை கால் களை இழக்கிறதே, உண்ண உணவின்றி, பட்ட காயத்துக்கு மருந்து இன்றி ஒரு நாளைக்கு பல பத்துபேர் அநியாயமாக உயிரை விடுகின்றனரே?? இது இந்த சமூகத்தை கவலை கொள்ள வைத்ததாக தெரியவில்லையே?? இன்று கூச்சளிடுகிற உலகம், அப்பாவிகள் கொள்ளப்படுகிற போது தன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறதே??


என் அன்பான உலகமே உன்னை ஒன்று கேட்கிறேன், இப்போது தெரிகிறதா தீவிரவாதி எங்கு இருக்கிறான் என்று??!
கிரிகெட் காரன் உயிர் என்றால் சந்தணத்திலும் ஒரு சாமானிய தமிழன் உயிர் என்றான் சாக்கடையிலுமா செய்யப்பட்டிருக்கிறது??
ஒரு தீவிர வாதி சுட்டால் எப்படி வலிகிறதோ அப்படித் தானே ஒரு அரசாங்கள் சுடும் போதும் வலிக்கும்??
இன்று ஏதோ ராக்கட் தாக்குதல் நடத்தி, பிழைத்துக் கொண்டார்களாமே, தீவிரவாதியின் ராக்கட் குண்டு தான் கொள்ளுமோ? அரசாங்க விமானம் போடும் குண்டு, மயில் இரகினால் தடவிக் கொடுக்குமோ??

மூன்று பேருக்கு காயம் என்ற உடன் உலக ஊடகங்கள் வாரி கட்டிகொண்டு வந்து அங்கு கீறல் இங்கு வீரல் என்று செய்திக்காக நாக்கை தொங்கப் போட்டுகொண்டு அலைகிறதே, இலங்கை அரசின் இந்தப் போரின் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்கள் கொள்ளப் பட்டது குறித்து எவனும் எந்த உண்மையையும் சொல்ல வில்லையே (அடக்கு முறைகளையும் மீறி உண்மை உரைக்கும் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை நான் மதிக்கிறேன்) ??!
ஒரு கிரிகெட் வீரன் தாக்கப் படும் போது நீ உணரும் வலியும் வேதனையும் ஒரு பிஞ்சுக் குழந்தை கொல்லப் படும்போது காட்டாதது ஏன்??


வாழ்க உங்கள் மனிதாபிமானம்...