Thursday, March 19, 2009

இந்தியாவில் பணவீக்கம் என்பது ஒரு போலிச் சொல்! ஏன்?


இந்த மார்ச் 7 ம் தேதியோடு முடிவடைந்த வாரத்திற்கான பண வீக்கத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது அனைவருக்கும் தெரியும், ஆம் 0.44 சதம் தான்!! கடந்த வாரம் 2.42 ஆக இருந்த பணவீக்கம் இந்த வாரம் 0.44 ஆக குறைந்தது, இது விலை குறைந்ததை உணர்த்தவில்லை மாறாக விலை ஏற்றம் மடுப்படுத்தப்பட்டத்தையே காட்டுகிறது! அதே நேரம் இந்த 0.44 என்பது மொத்த விலை குறியீடு, சமீபத்திய நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு எவ்வளவு தெரியுமா, 10.45 சதம்!!

இந்திய அரசு எவ்வாறு தன்னுடைய பணவீக்கத்தை கணிக்கிறது என்பதை பார்த்தபின் அதனால் எவ்வாறெல்லாம் என்னையும் உங்களையும் போல ஒரு சராசரி குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை பார்ப்போம்.

நமது பணவீக்கம் மொத்த விற்ப்பனை குறியீடு (Wholesale Price Index 'WPI') எனப்படும் முறையில் கணக்கிடப்படுகிறது. இது 1902 ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பொருளாதார மாற்றங்களை கணக்கிட கடைபிடித்த முறை. அதன் பின்னர் வளர்ந்த நாடுகளில் 1970 முதல் 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' (Consumer Price Index 'CPI') என்ற முறையை அறிமுகப்படுத்தி கடைப்பிடித்து வந்தனர். இந்த முறைகளில் என்ன வேறுபாடு என்று அறிவது முக்கியம்.

மொத்த விற்ப்பனை குறியீடு

நமது நாட்டில் இருப்பதை போல் மொத்த விற்ப்பனை குறியீடு மூலமாக 435 அடிப்படை பொருட்களின் (உதாரணமாக ஒரு டன் இரும்பின் விலை, ஒரு டன் சிமென்டின் விலை, பருத்தி, பஞ்சு, புகையிலை, என்பன...) விலையை கண்காணித்து அதன் விலை ஏற்றங்களை பிரதி வாரமும் கணக்கெடுத்து பணவீக்கத்தை உணர முடியும். ஆனால் 435 ல் 100 வகைகளுக்கும் அதிகமான பொருட்கள் நுகர்வோருக்கு சிறிதும் தேவை இல்லாத பொருட்கள் ஆகும். மேலும் இந்த முறையில் மொத்த வணிகத்தில் ஏற்படும் தாக்கத்தை மட்டுமே உணர முடியும் ஆனால் இங்கு அதை பொது மக்களின் மீது ஏற்படும் தாக்கத்தை கணிக்க பயன்படுத்துகின்றனர்! மேலே குறிப்பிட்ட 435 பொருட்களின் பட்டியலும் 1993-1994 ம் வருடம் நிர்ணயிக்க பட்டது. அதன் பின்னர் எந்த மாற்றமும் இன்றி வைக்கப்பட்டுள்ளது. (அதே வேளை CPI முறையில் ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விரும்பி வாங்கும் பொருட்களை பரிசீலித்து அவற்றை பட்டியலிட்டு கண்காணிக்கின்றனர் அயல் நாடுகளில்!) 'WPI' முறையில் கணக்கிட்டால் தவறான குறியீடாகவே அமையும் என்று பல பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டு வருவது கவனிக்கப்பட வேண்டியது அவசியம். இது தொழிலதிபர்களுக்கு சாதகமான முறையே தவிர சராசரி பொதுமக்களின் சுமையை ஒருபோதும் கணிக்காது. உலகில் உள்ள பெரிய நாடுகளில் 'WPI' முறையை கடைபிடிப்பது இந்தியா மட்டுமே என்பது குறிப்பிட தக்கது.

நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு

அதே சமயம், 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' மூலம் நுகர்வோர் வாங்கும் முனையில் உள்ள 100 முக்கிய பொருட்களின் விலையை கண்காணித்து அதன் மூலம் பணவீக்கம் கணக்கிட படுகிறது! இப்போது உங்களுக்கே நன்றாக புரியும், 'CPI' மூலம் கணக்கிடுவது நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மிக துல்லியமாக கணிக்க முடியும். அமெரிக்கா தொடங்கி இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், சீனா, சிங்கபூர், உள்ளிட்ட நாடுகள் இந்த முறையிலேயே தங்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்க்கை தரத்தை (Cost of Living) கணிக்கின்றனர்.

நமது அரசு மிகப்பெரிய / மொத்த வியாபாரிகளின் அருகில் இருந்து கவனிக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளினால் நம்மை போன்ற சாதாரண குடிமகன் முகம்கொடுக்கின்ற / எதிர்நோக்குகின்ற பொருளாதார சவால்களை உணர முடியாது என்பது தெளிவாகிறது!

யார் காரணம்?

இனி பணவீக்கம் என்ற காரணியால் நாம் அனைவரும் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை பார்க்கலாம். மேலே குறிப்பிட்டதை போல கடந்த ஆகஸ்ட் மாதம் 'கச்சா எண்ணெய்' (Crude Oil) விலைஅதிகரித்ததால் பணவீக்கம் அதிகரித்தது என்ற செய்தி வெளியானவுடன், பெட்ரோல், டீசல், மட்டுமல்லாமல், சகல பொருள் அங்காடி (Super Market) முதல் பெட்டி கடைகள் வரை அனைத்து கொள்முதல் வழிகளிலும் விலை ஏற்றத்தினை கண்டோம். அரிசி முதல், சீம்பூ (கலைச்சொல் 'Shampoo'), பல் பொடி வரை அனைத்து பொருட்கள் விலையும் ஒரு சில நாட்களிலேயே உயர்த்தப்பட்டது!! என்ன காரணம்??! இதன் விளைவாக உணவு விடுதிகள் அனைத்திலும் விலை ஏற்றம், சரி நியாயம்தான்(!).

அதன் பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது, பணவீக்கமும் (செய்திகள் முலமாக தெரிந்து கொண்ட 12, 10, 4, 2.42, 0.44 என) குறைய தொடங்கியது... இறுதியில் பல இழுபறிகளுக்கு பிறகு அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைத்தது. இன்று, அரசு பணவீக்கத்தை கட்டுப்படுதிவிட்டது, எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது, சாதனை நிகழ்திவிட்டது என்றெல்லாம் தினமும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். எல்லாம் சரி, நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை சந்தையில் குறைந்ததா?? இல்லை. யாரை கேட்பது?! இன்று நம் அரசியல் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு இது தெரியுமா தெரியாதா??

ஏன் இதை மாற்ற முயற்சிக்க வில்லை? ஏனென்றால், அவர்களுக்கு பெரிய முதலாளிகளின் ஆதரவு (பொருள் ஆதரவு!) வேண்டும். அரசு இந்த 'WPI' முறையை கடைபிடிப்பதால் தங்களுக்கு நன்மை என்று பெரும் முதலாளிகளுக்கு தெரியும்! அதனால் தான் பணவீக்கம் ஏறும் போது தங்களின் அனைத்து பொருட்களின் விலையையும் ஏற்றவும் பின் பணவீக்கம் பாதாளத்தில் இறங்கினாலும் விலையை ஒரு படி கூட குறைக்காமலும் இருக்க முடிகிறது! ஆனால் உங்களையும் என்னையும் போல இருக்கும் சராசரி குடிமகனுக்கு இருப்பதெல்லாம் விலை எப்போது குறையும் என்ற வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே!

இந்த போலி பணவீக்கம் என்ற எண்களை காட்டி ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு நம்மால் பாடம் புகட்ட முடியுமா??

உங்கள் கருத்துக்களை பதிலாய் இட்டால் பயனுள்ளதாக இருக்கும்...

   

6 comments:

. said...

Really a good explanation.

Congrats.

Ayyanar said...

good article...

Maduraikkaran said...

A very good and informative post. I was asking many people who know economy well, they were saying as you said in the post. It is very unfortunate that Government is cheating "Pothu Janam". We as people of india stand unitedly and tell loudly to the goverment that it should not keep the people in dark. All educated and eligible voters should think before vote. Also Students should go to village to village and tell the people that they should not take money for vote. "Panathal vangapatta Jananayagam India-vin Sabam". Earlier only politicians alone were corrupted and now they are making "Pothu Janam" also corrupted. People should understand this.

Sathish said...

Nalla information...

Thank u for ur Informations....

Sathish said...

Thank you for ur information

தமிழர் நேசன் said...

Mani(.), Ayyanaar, Maduraikkaaran, Sathish thanks all...

Post a Comment