Monday, April 6, 2009

எல்லை தாண்டிய இனவெறி. அரசு எவ்வழியோ; மக்களும் அவ்வழியே!

நண்பரகளே! நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மெல்பார்ன் நகரில் நடந்த ஒரு செய்தி பலருக்கும் தெரிந்ததே! அதாவது, "இலங்கை தமிழர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் ஒரு ஊர்வலத்தின் போது தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது"

இங்கே கீழே உள்ள காணொளியை பாருங்கள், சிங்கள மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் முன்பு தங்கள் அரசு நடத்தும் போருக்கு ஆதரவு தர கோரி குவிந்திருக்கின்றனர். அதே சமயம், அன்று ஒரு தொடரணி (மகிழுந்து) மேற்க்கொண்டு தங்களின் ஈழத்தின் சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டி தமிழர்கள் தாங்கள் ஏற்கனவே காவல் துறையிடம் பெற்ற அனுமதியின் பெயரில் அந்த சாலை வழியாக பயணிக்கின்றனர். அப்போது அந்த தொடரணி பாராளுமன்றம் முன்பாக கடந்து செல்கிறது.

அப்போது அந்த சாலையை நெடுகே கடக்க சிவப்பு விளக்கு எரிகிறது, அந்த தொடரணி முறிகிறது, அங்கு முன்னால் வந்து நின்ற ஒரு தமிழர் வாகனம், அங்கு கூடி இருந்த சிங்களவரால் என்ன நிலைக்கு ஆளாக்கபடுகிறது என்பதை இந்த கானொளியில் காணவும்.



அவர்களிடத்தில் தமிழர்களை கண்டு எவ்வளவு இளக்காரம், அவர்களும் இவர்களை போன்ற மாணவர்கள்;இளைஞர்கள். அவரவர் நூகத்துக்காக போராடுகின்றனர் என்ற சிந்தனை கூட இன்றி, தமிழர்களை எவ்வளவு அவமதிக்கின்றனர்??? சிறிதும் சகிப்பு தன்மை இல்லாத ஒரு இளைஞர் சமுதாயத்தை அந்த நாட்டு அரசும், சிங்களவர்களும் வளர்த்து வைத்துள்ளனர் என்பதை இந்த சம்பவம் எவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுகிறது??

உங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்த்தவன் என்பதற்காக பெரும்பான்மை சமூகத்தினர் உங்களை கீழ்த்தரமாக பார்த்தாலும் நடத்தினாலும் உங்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்?! எப்படி அவர்களோடு கைகோர்த்து சேர்ந்து வாழ முடியும்??

இப்படி பல நூறு கேள்விகள் ஒரு சில நிமிடங்களில் என் மனதில் எழுந்து நிற்கிறது..

மேலும் ஒரு கொடுமையான உண்மை.

சம்பவம் நடந்த அன்று இந்த செய்தி B.B.C யில் வெளியிடப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா போலீஸ் அதிகாரி சொல்கின்றார், "இரு தரப்பில் யார் மீது பிழை என்று தெரியவில்லை ஆனால், அங்கு அமைதியாக அமர்ந்துகொண்டிருந்த சிங்கள மாணவர்களுக்கும் தொடரணியாக வந்த தமிழ் மாணவர்களுக்கும் எப்படியோ தள்ளு முள்ளு நேர்ந்துவிட்டது!!".

என்ன காரணம், ஏன் மொத்த உலகமும் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது?? புரியவில்லை நண்பர்களே!!

   

1 comment:

தமிழர் நேசன் said...

இந்த தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்தனர். 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், வெளிவந்த செய்தியோ, இரு தரப்பிலும் ஒருவர் காயமடைதனர் என்றும், ஒரு வாகனம் மட்டும் சேதமடைந்தது என்றும் பொய் பரப்புரைகள் செய்கின்றன?? என்ன கொடுமை?!

Post a Comment